Madurai Rains: 70 ஆண்டுகளுக்கு அதிக மழை; 30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த மதுரை.. கனமழையால் தவித்துப்போன தூங்கா நகரம்.. காரணம் என்ன?
சென்னையும் மழை-வெள்ளத்தின் பிடியில் சிக்கியது. தற்போது மதுரை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.
அக்டோபர் 26, மாட்டுத்தாவணி (Madurai News): வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திற்கு முன்பும், தென்மேற்குப்பருவமழையின் விலகலின்போதும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் நல்ல மழையை கண்டது. மதுரை மாநகரத்தில் இருந்த ஒருசில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியது. இதனிடையே, அக்.25ம் தேதிக்கு முன்பில் இருந்து மதுரையில் லேசாக பெய்யத்தொடங்கிய மழை, நேற்று முழுக்க வெளுத்து வாங்கியது. கை-கால்களை உடைத்து 13 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; சிவகங்கையில் பேரதிர்ச்சி..!
ஸ்தம்பித்துப்போன மதுரை:
இதனால் மதுரை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள் நல்ல மழையை எதிர்கொண்ட நிலையில், தாழ்வான பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையை முன்கூட்டியே மாநகர நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை எனினும், மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மீட்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
70 ஆண்டுகளுக்கு பின் பேய் மழை:
மதுரை மாநகரை பொறுத்தமட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மழை நேற்று பெய்துள்ளது. நேற்று ஒரேநாளில் 10 செமீ அளவு மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 15 நிமிடங்களில் மட்டும் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மதுரை ஸ்தம்பித்துபோகும் அளவு தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து இருக்கிறது. அதேபோல, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாநகரில் திரும்பும் இடமெல்லாம் வெள்ள நீர் நகரை சூழ்ந்துகொண்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரேநேரத்தில் அதிக மழையை எதிர்கொண்டது நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேவேளையில், நகரம் புத்தாக்கம் பெரும்போது மழைநீர் வடிகால், கால்வாய் புனரமைப்பு பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு இருந்தால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய நீர் வெளியேறி இருக்கும். அவை வெளியேற இயலாத இடங்களில் நீர் தேங்கி காணப்படுகிறது.
வெள்ளத்தினால் அரசு நிர்வாகத்தை மனவேதனையை வெளிப்படுத்தும் பதிவர்:
3 மணிநேரம் பெய்த மழையால் பாண்டியன் நகர் பகுதியில் வெள்ளம்: