MDMK DuraiSamy: மகனுக்கு பதவி கொடுத்து மதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய வைகோ; திருப்பூர் துரைசாமி பரபரப்பு குற்றசாட்டு..!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, தனது கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

MDMK Durai Vaiko | Vaiko File Pics (Photo Credit: Twitter)

ஏப்ரல் 29, திருப்பூர் (Politics News): கடந்த 1994ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய வைகோ (Vaiko), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அதன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளராக இன்று வரை பணியாற்றி வருகிறார். அவர் புதிய இயக்கத்தை தோற்றுவிக்கையில் ஈழ பிரச்சனை, திமுகவின் வாரிசு அரசியல் தொடர்பான வாதம் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்து புதிய கட்சியை உருவாக்கினார்.

இந்த நிலையில், இன்றுள்ள வைகோவின் செயல்பாடுகள் தன்னை வருத்தமடைய வைத்துள்ளது என மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் அவர் கூறியவையாவது,

"மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட சமயத்தில், வைகோ வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகள் தந்தார். அவரின் பேச்சை கேட்டு இலட்சக்கணக்கான தொண்டர்கள் மதிமுகவில் இணைந்தார்கள்.

நிலைமை அப்படியிருக்க, இன்றைய வைகோவின் குழப்பமான அரசியல் நிலைப்பாடுகள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவர்கள் மாற்றுக்கட்சியில் இணைகிறார்கள். படிப்படியாக திமுக பக்கம் சாய்கின்றனர். Chemical Lorry Govt Bus Accident: கெமிக்கல் பாரம் ஏற்றிய லாரி மீது தமிழக அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 9 பேர் கவலைக்கிடம்; 13 பேர் படுகாயம்.! 

Tiruppur Duraisamy With Vaiko (Photo Credit: The Hindu)

மகனின் ஆதரவு, அரவணைப்பு, சந்தர்ப்பவாத அரசியல் போன்றவை தமிழக மக்களிடையே எல்லி நகையாடும் விஷயமாகிவிட்டது. இதனை வைகோ உணராமல் இருக்கிறார். இதுதான் வேதனையின் உச்சம். கடந்த 30 ஆண்டுகளாய் வைகோவுடைய உணர்ச்சி பேச்சுக்களை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் பலர்.

அவர்கள் ஏமாற்றம் அடையாது இருக்க வேண்டும் என்றால், மதிமுகவை தாய்கழக்கமான திமுகவின் இணைப்பதே சரியாக இருக்கும். நல்லதாகவும் இருக்கும்" என தெரிவித்தார். இவரின் பேச்சுக்கு வைகோவின் மகன் துரை வைகோ விளக்கமளித்த நிலையில், அதனை திருப்பூர் துரைசாமி ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டார்.

வைகோ மட்டுமே தனக்கு பதில் உரைக்க வேண்டும் என கூறி வருகிறார். அவர் தனது நீண்ட கால நண்பரான வைகோவுடன் ஏற்பட்ட பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்வாரா? அல்லது கருத்து வேறுபாட்டால் மாற்று கட்சிக்கு செல்ல முனைவரா? என்ற எதிர்பார்ப்பு அரசியலில் அடுத்தகட்டமாக எழுந்துள்ளது.

மதிமுகவில் சமீபத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாக துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து, அவரை அரசியலுக்குள் முழுவீச்சில் களமிறக்கியதே காரணம் என்பது திருப்பூர் துரைசாமியின் அறிவிக்கையில் இருந்து உறுதிபட தெரிகிறது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.