Road Roko Protest: அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்.. போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு..!

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Road Roko Protest (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 14, சென்னை (Chennai): சென்னை கோடம்பாக்கம் (Kodambakkam ) மேம்பாலத்தில் அமர்ந்து நூறுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு பார்வையற்றோருக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கவும் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும் என 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் சாலையில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தினால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து வருகின்றனர். Mozilla Layoffs 2024: மொஸில்லா நிறுவனத்தின் திடீர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!