Mozilla (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 14, புதுடெல்லி (New Delhi): பிரபல மொஸில்லா பயர்பாக்ஸ் நிறுவனம் லாரா சேம்பர்ஸை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த வாரம் நியமித்தது. அவர் முன்னாள் Airbnb Inc மற்றும் eBay Inc நிர்வாகி ஆவார். மொஸில்லாவின் நீண்டகால தலைவராக இருந்த மிட்செல் பேக்கர் (Mitchell Baker), நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் இருந்து விலகியதனால், இவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Video- Guy Kicking Girl: காதலியை எட்டி உதைக்கும் காதலன்.. காதலர் தினத்தன்று வைரலாகும் வீடியோ..!

இந்நிலையில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) தலைமையில், நிறுவனம் 60 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்த நடவடிக்கை சுமார் 5% ஊழியர்களை பாதிக்கும். Mozilla நான்கு ஆண்டுகளுக்கு முன்பு Covid-19 தொற்றுநோயின் உச்சத்தில் இருந்தபோது பணிநீக்கம் செய்தது. பின்னர் இப்போது தான் செய்கிறது. Mozilla சமீபத்திய ஆண்டுகளில் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தத் தொடங்கியது. முன்னர் அதன் முதன்மைத் தயாரிப்பான Firefox, சந்தைப் பங்கை இழந்து கொண்டே இருந்தது. இந்த மாற்றங்களுடன், மொஸில்லா ஃபயர்பாக்ஸில் மீண்டும் கவனம் செலுத்துவது போல் தெரிகிறது