Nagapattinam Accident: நாகப்பட்டினத்தில் நடந்த பயங்கரம்; அதிவேகத்தில் பயணித்த 3 சிறார்கள் விபத்தில் துள்ளத்துடிக்க பலி.!

தனது மகன் ஆசைப்படுகிறான் என்ற காரணத்திற்காக, சாலையின் ஆபத்தை நன்கு உணர்த்தும் சிறாருக்கு வாகனத்தை கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இச்சம்பவம் பாடமாக அமைந்துள்ளது.

Died Victims | Accident File Pic (Photo Credit: Facebook / Pixabay)

அக்டோபர் 20, கீழ்வேளூர் (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், கூத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரிஷிவான், பாசித், நூபுல். சிறார்கள் மூவருக்கும் 17 வயது ஆகிறது. பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.

நேற்று காலை சிறார்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவாரூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர். மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சமயத்தில், எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது.

அவ்வழியே எதிர்திசையில் வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி வந்த சிறார்கள், சரக்கு வாகனத்தின் மீது மோதி இருக்கின்றனர். Virat Kohli 100: சதமடித்து விளாசிய கோலி; ஆரவாரத்தில் பொங்கிய ரசிகர்கள்.. அதிர்ந்த கிரிக்கெட் மைதானம்.! 

இந்த விபத்தில் ரிஷிவான் மற்றும் பாசித் ஆகியோர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். நூபுல் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் காவல் துறையினர், சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு மூவராக பயணித்தது, தலைக்கவசம் அணியாதது, அதிவேகத்தில் பயணம் செய்தது போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

இன்றளவில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறினால் கால்களை ஊன்றி நிற்க வைக்க சிரமப்படும் இளைஞர்கள், எடையுள்ள அதிவேக இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவர்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளில் சில நேரம் அவர்களே உயிரிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

தனது மகன் ஆசைப்படுகிறான் என்ற காரணத்திற்காக, சாலையின் ஆபத்தை நன்கு உணர்த்தும் சிறாருக்கு வாகனத்தை கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இச்சம்பவம் பாடமாக அமைந்துள்ளது.