Virat Kohli Century (Photo Credit: Twitter / Instagram)

அக்டோபர் 20, மும்பை (Cricket News): ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC Cricket World Cup 2023) போட்டியின் 17வது ஆட்டம், நேற்று மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியா - வங்கதேச அணிகள் நேற்று மோதிக்கொண்டன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை குவித்தது. 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

வங்கதேச அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ஹசன் 43 பந்துகளில் 51 ரன்னும், தாஸ் 82 பந்துகளில் 66 ரன்னும், ரஹீம் 46 பந்துகளில் 38 ரன்னும், முக்மதுல்லா 46 பந்துகளில் 36 ரன்னும் அதிகபட்சமாக அடித்து அணிக்கு வலுசேர்த்தனர். IND Vs BAN: இலக்கை நிர்ணயம் செய்தது வங்கதேச அணி; இந்தியாவின் பந்துவீச்சை சிதறவிட்ட வீரர்கள்.! 

மறுமுனையில் இந்திய வீரர்கள் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 40 பந்துகளில் 48 ரன்னும். ஹில் 55 பந்துகளில் 53 ரன்னும், விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 19 ரன்னும், கே.எல் ராகுல் 34 பந்துகளில் 34 ரன்கள் அடித்திருந்தனர்.

இவர்களில் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் விக்கெட்டை இறுதி வரை இழக்கவில்லை. இதனையடுத்து 41.3 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் சேர்த்து வெற்றி அடைந்தது. விராட் கோலியின் சதம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.