Man Cheated by 5 Man Gang: பெண் போல ஆசையாக பேசி, தைலமர தோப்புக்குள் இளைஞரை பதறவைத்த 5 பேர் கும்பல்..!
ஆசையாக பேசுகிறார்கள் என்பதற்காக, உண்மை அறியாமல் ஒற்றை ஆளாக சென்று உயிர்தப்பி வந்த இளைஞரின் பதைபதைப்பை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நவம்பர் 01, பரமத்தி (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் (Paramathi Velur, Namakkal), சந்தைப்பேட்டை தெருவில் வசித்து வருபவர் கண்ணன், இவரின் மகன் சதீஷ்குமார் (வயது 30). சம்பவத்தன்று சதீஷ்குமாரின் செல்போனுக்கு இளம்பெண் ஒருவர் தொடர்புகொண்டு ஆசையாக பேசியிருக்கிறார்.
இருவரும் மனம் விட்டு ஆசையை தூண்டும் விதமாக பேசியதாக தெரியவரும் நிலையில், சதீஷ்குமாரை கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர், தட்டாங்குளம் தைலதோப்பு பகுதிக்கு பெண்மணி வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளார்.
பெண்ணின் குரலுக்கு மயங்கிப்போன சதீஷ்குமாரும், தைலத்தோப்புக்கு தனியாக சென்ற நிலையில் அங்கிருந்த 5 வாலிபர்கள் சதீஷ்குமாரை பிடித்து, அவரிடம் இருந்த வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகிவற்றை பறித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். Dengue Rates Plunged: டெங்கு நோயை பரவலாக கட்டுப்படுத்திய விஞ்ஞானிகள்; ஆய்வு சாத்தியமானது எப்படி?.. விபரம் இதோ.!
இதனால் பாதிக்கப்பட்ட சதீஷ்குமார், தான் இளம்பெண் போர்வையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி புகலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 20), சூர்யா (வயது 21), விஜய் (வயது 19), கார்த்திகேயன் (வயது 19), ரூபன் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பெண் குரலில் பேசி இளைஞரை மயக்கி, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.