நவம்பர் 01, கொலம்பியா (Technology News): சர்வதேச அளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் டெங்கு பாதிப்பு மக்களுக்கு ஏற்படுகிறது. மேலும், 22 ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழக்கின்றனர். இதனால் டெங்கு மற்றும் அதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்க அல்லது அதன் நடவடிக்கையை குறைகை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கொலம்பியாவில் உள்ள அபுரா பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மூன்று நகரங்களை தேர்வு செய்து, அங்கு மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் டெங்கு நோயை பரப்பும் கொசுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, டெங்கு பாதிப்பு 97 விழுக்காடு குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவிலான கொசு ஒழிப்பு திட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள், தற்போது டெங்கு, ஜிகா மற்றும் மஞ்சள் வைரஸ் போன்ற நோய்கள் உள்ள இடங்களில் வால்பாசியா (Wolbachia) பாக்டீரியாவை வெளியிட்டு, உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் கொசுக்களின் வளர்ச்சியை தடுத்து இருக்கின்றனர். ICC CWC 2023: வாழ்வா? சாவா? நிலைமைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள்... அடுத்தடுத்து அனல் பறக்கப்போகும் கிரிக்கெட் மைதானங்கள்.. விபரம் இதோ.!
இந்த பாக்டீரியா டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்களின் நோய் பரப்பும் திறனை குறைக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கொலம்பியா பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இந்த சோதனைகளை செய்துள்ளனர்.
இந்த சோதனைகளின் முடிவாக 2022 ஏப்ரல் மாதம் கொசுக்களின் இனப்பெருக்கம் என்பது கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அங்குள்ள மக்கள் நோய்வாய்ப்படும் விபரங்களையும் சேகரித்து, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் அங்கு ஒட்டுமொத்தமாக 47 விழுக்காடு டெங்கு பாதிப்பானது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த பாதிப்பு என்பது கணிசமாக குறைக்கப்படும் என்றும், டெங்கு போன்ற நோய்தொற்றுகளை அகற்ற இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.
வால்பாசியா பாக்டீரியாக்கள் செயல்படும் விதம், அதனை உருவாக்க செலவிடப்பட்ட தொகை போன்றவை விலையுயர்ந்த நடவடிக்கைகள் என்பதால், இதனை உலகளவில் கொண்டு செல்வத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவை 100% ஒரே மாற்று என்பதில்லை. ஆகையால், ஆய்வாளர்கள் தங்களின் ஆராய்ச்சியை மேம்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சியில் ஆய்வகத்தில் வைத்து டெங்குவை பறப்பாத சாதாரண கொசுக்கள் மரபணு மாற்றப்பட்டு, பின் அவைகளை ஏடிஸ் வகை கொசுக்களுடன் பொதுவெளிக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இதனால் ஏடிஸ் வகை கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு, டெங்கு பரவல் தவிர்க்கப்பட்டது.