TNEB Updates: மின்சார தேவைகளுக்கு எளிய தீர்வு.! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.! தமிழக மின்சார ஒழுங்குமுறைஆணையத்தின் அறிவிப்பு.!
தமிழகத்தில் இணையதளம் வாயிலாக மின் இணைப்பு பெறும் வசதி செயல்பாட்டில் இருக்கும் நிலையில், மின் மீட்டர் இடமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக மின்சார துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அக்டோபர் 10, சென்னை (TamilNadu News): தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை, மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறது. புதிதாக மின் இணைப்பு வேண்டுபவர்களுக்கு, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tamilnadu Generation and Distrubution Corperation) அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.
வழக்கமாக புதிய மின் இணைப்பை பெறுவதற்கு, 30 நாள் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது தமிழகத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சில திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஏழு நாட்களுக்குள் மின் இணைப்பு ஏற்படுத்தித் தரப்படும். Alien UFO Sightings: விமானத்தை விட வேகமாக 3 மர்ம வாகனங்கள்.. நடுவானில் நடந்த சம்பவத்தால் ஏலியன் அச்சம்..!
ஏழு நாட்கள் ஆன பின்பும், மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றால், தமிழகத்தின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் ஆயிரம் ரூபாய் வரை அபராத தொகை வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது.
புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு, www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது மின் மீட்டரை இடமாற்றம் செய்ய விரும்பும் பயன்பாட்டாளர்களும் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.