ஆகஸ்ட் 22, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர்கள், தீயணைப்பு படை வீரர்கள் உட்பட 3600-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்துகிறது. போட்டி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோர் இப்பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு :
அந்த வகையில் 2833 இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களும், 631 தீயணைப்பு படை வீரர்கள் பணியிடங்களும், 180 சிறைகாவலர் பணியிடங்களும் நிரப்பப்பட அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 10 - ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,200 வழங்கப்படும். அதிகபட்சமாக அவர் பணியை நிறைவு செய்யும்போது ரூ.67,100 சம்பளத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.
வயது குறித்த விபரம் :
இந்த வேலைக்கு வயது வரம்பாக குறைந்தபட்ச வயது 18 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயதாக பொதுப்பிரிவினருக்கு 26 வயதும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 28 வயதும், ஆதிதிராவிடருக்கு 31 வயதும், மூன்றாம் பாலினத்தவருக்கு 31 வயதும், விதவைப் பெண்களுக்கு 37 வயதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 47 வயதும் அறிவிக்கப்பட்டுள்ளது. Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
தேர்வு குறித்த முக்கிய தேதிகள் விபரம் :
ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதியான இன்று முதல் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி வரை இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்து தேர்வில் பங்கேற்கலாம். அதுபோல இணையவழியில் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் திருத்தும் செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- தேர்வுக்கு விண்ணப்பிக்க : https://www.tnusrb.tn.gov.in/
- பின் Online Application என்ற இணைய வழி விண்ணப்ப பக்கத்தை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
- உள்நுழைந்த பின் தங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்த பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது ஆவணங்கள், புகைப்படம், கையொப்பம் உள்ளிட்டவற்றை பதிவேற்றி தேர்வுக்கு தயாராகலாம்.
- பெயர் விபரங்களை கொடுக்கும்போது கவனமாக இருக்கவும்.
- விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை நிரப்பும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தேர்வு குறித்த அறிவிப்பு பக்கத்தில் உள்ள அறிவுரைகளை கவனமுடன் படித்தல் அவசியம்.
- வேலைவாய்ப்பு, தேர்வு குறித்த அறிவிப்பை பார்க்க : https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_CR_2025.pdf
- அதுபோல ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதோர் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.