O Panneer Selvam Tie With TTV Dhinakaran: டிடிவி தினகரனுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம்; சவாலை எதிர்கொள்ள தயாராகவேண்டிய கட்டாயத்தில் அதிமுக.!
அதிமுகவில் எஞ்சியுள்ள தொண்டர்கள் மற்றும் மக்களின் வாக்குகளை சேகரிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு டிடிவி தினகரனுடன் இணைந்து அடுத்தகட்டமாக செயலாற்றும் என்பது இனி அதிமுகவினருக்கு பெரும் சவாலாக அமையப்போகும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.
மே 08, அடையாறு (Politics News): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (J. Jayalalithaa) மரணத்திற்கு பின்னர், அதிமுக (AIADMK) இரண்டாக உடைந்து பலகட்ட பிரச்சனைகள் நடந்தன. முடிவில் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தலைமையில் ஒரு அணி பிரிந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (AMMK) என்ற கட்சி உதயமானது. ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) - ஓ.பன்னீர் செல்வம் (O. Panneer Selvam) வசம் வந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்குள் எழுந்த பல்வேறு பிரச்சனைகளை ஈடுகட்டி அரசு ஆட்சி தக்கவைக்கப்பட்டது.
இதற்கிடையே, அவ்வப்போது தலைமை பொறுப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே பனிப்போர் நிலவி வந்தன. ஒருவர் பங்கேற்கும் கூட்டத்தில் மற்றொருவர் பங்கேற்காமல் புறக்கணிப்பது, இருதரப்பு ஆதரவாளர்களின் எதிரெதிர் கோஷங்கள் என அவை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டு இருந்தன.
2023 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக எதிர்பார்ப்பை விட குறைவான தொகுதிகள் பெற்று தோல்வியை தழுவி திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், அதிமுகவில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர் செல்வம் கருத்து மோதல் வெளிப்படையாக தொடங்கி, இருவரும் தங்களின் தலைமையில் அதிமுக இருக்கிறது என உரிமை கொண்டாட தொடங்கினர். Tamil Nadu 12th Board Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவ-மாணவிகள் தேர்ச்சி விகிதம் என்ன தெரியுமா?..!
இதனால் இருதரப்பும் நீதிமன்றம் வரை சென்று, பலகட்ட விசாரணை மற்றும் வாதங்களுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பொதுக்கூட்டம் செல்லும், அதன் தீர்மானங்களும் செல்லும் என அறிவிப்பு வெளியானது. பல வாரங்களுக்கு பின்னர் அவை தேர்தல் ஆணையத்தாலும் உறுதி செய்யப்பட, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தொடர்ந்து தெரிவித்து வந்தது.
இந்த சூழ்நிலைகளால் தமிழ்நாடு அரசியல் பரபரப்பான நிலையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சென்னை அணியின் போட்டியை காண சென்ற ஓ.பன்னீர் செல்வம், அங்கு தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீஷனை சந்தித்து பேசியது அனைவரையும் பரபரப்பகியது. ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைகிறாரா? என பல்வேறு ஊகங்கள் வெளியாகின.
அதிமுகவில் நிலவி வந்த குழப்பமான சூழ்நிலை, தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் வாக்கு பிரிவு உட்பட பல காரணங்களால் ஆட்சியை இழந்த அதிமுகவில், அடுத்து என்ன நடக்கும் என்பதை பலரும் கவனித்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழக மக்கள் எதிர்பார்க்காத, அதிமுக புள்ளிகள் எதிர்பார்த்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Women Officers at Line Of Control: இந்திய எல்லையில் பெண் இராணுவ அதிகாரிகள் பணியாற்ற ஒப்புதல்; பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடி.!
சென்னையில் உள்ள அடையாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை பண்ரூட்டி இராமச்சந்திரனுடன் சென்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து, இனி இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, எடப்பாடி பழனிசாமியை துரோகி என அறிவித்து, திமுகவை தங்களின் எதிரி என கூறியுள்ளனர். விரைவில் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும் சந்திக்கவுள்ளார்.
அதிமுகவில் எஞ்சியுள்ள தொண்டர்கள் மற்றும் மக்களின் வாக்குகளை சேகரிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு டிடிவி தினகரனுடன் இணைந்து அடுத்தகட்டமாக செயலாற்றும் என்பது இனி அதிமுகவினருக்கு பெரும் சவாலாக அமையப்போகும் விஷயங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது. அதனை எடப்பாடி பழனிச்சாமி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது தான் இனி களநிலவரமாக இருக்கும்.
உண்மையில் மக்களுக்கு செய்ய வேண்டும் என நினைத்தால், இவர்களின் கருத்து முரண் கொண்ட அரசியல் தேவை இருக்காது. அனைவரும் எதோ வரையில் சுயநலவாதிகள்., மனிதர்கள் உட்பட.. எது உங்களுக்கு தேவையோ அதனை நீங்களே யோசித்து தேர்வு செய்யுங்கள்.