Ranipet Shocker: ஜப்பான் அனிமேஷன் பார்த்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டதால் பேரதிர்ச்சி: சுகானா கதாபாத்திரம் போல பகீர் செய்கைகள்.!

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? என பெற்றோர்கள் கண்காணிக்க தவறினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Affected Minor Boy | Sukuna Anime (Photo Credit: Facebook / Wikipedia / YouTube)

செப்டம்பர் 04, அரக்கோணம் (Ranipet News): இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் (Arakkonam, Ranipet), காளிவாரி கண்டிகை பகுதியில், 18 வயது கல்லூரி மாணவர் (College Student) பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு பிஇ பட்டம் பயின்று வருகிறார்.

வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், பகல்-இரவு பாராது செல்போன், கம்பியூட்டரில் கேம் விளையாடி வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சிறுவனின் தந்தை உயிரிழந்துவிடவே, அண்ணன் குடும்ப பாரத்தை சுமந்து வருகிறார்.

சிறுவனின் அண்ணன் வெளிநாட்டில் வேலைபார்த்து மாதம் வீட்டிற்கு பணம் அனுப்பிவைக்கும் நிலையில், தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் முதல் சிறுவன் வீட்டில் இருப்போரை அவதூறாக, ஆபாசமாக பேசி தாக்க முயற்சித்து இருக்கிறார். அதேபோல, எதிரில் வரும் நபர்களையும் அடிக்கப்பாய்ந்துள்ளார். Potato Murukku: சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!

இதனால் பதறிப்போன சிறுவனின் தாய், மகனின் கை-கால்களை கட்டிப்போட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் மூலமாக ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் நடந்த நிலையில், மருத்துவர்களையும் அவதூறாக பேசி இருக்கிறார்.

சிறுவனின் நிலையை உணர்ந்துகொண்ட மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கை-கால்களை கட்டிப்போட்டு அவசர ஊர்தியில் ஏற்றிய நிலையில், தன்னருகே இருந்தவர்களை கடுமையாக கடிந்துகொண்டார்.

சம்பந்தப்பட்ட மாணவர் ஜப்பான் மொழியில் வெளியான அனிமேஷன் தொடரில் வரும் சுகுனா (Ryomen Sukuna) கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, அக்கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.