Virudhunagar: விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு; 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - முதல்வர் அறிவிப்பு.!
ரூ.77.12 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை தரைந்து வாய்த்த தமிழ்நாடு முதல்வர், பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு அரசு சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நவம்பர் 11, விருதுநகர் (Virudhunagar News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) விருதுநகர் மாவட்டத்திற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு ரூ.417 செலவிலான நலத்திட்டங்களை, 57,556 மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், கட்டிடப்பணிகள் நிறைவுபெற்று ஆட்சியர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. அதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருக்கும் அரசுக்கட்டிடங்கள் ரூ.77.12 கோடி செலவில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. Tiruvannamalai: ஆசீர்வாதம் பெயரில் கட்டாய வழிப்பறி., புதுமணத்தம்பதி மீது தாக்குதல்; திருநங்கைகளின் அதிர்ச்சி செயல்..!
கல்விச்செலவை அரசே ஏற்கும்:
நேற்றைய அரசுவிழாவில் விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் 40 ஆயிரம் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பட்டாசு தொழிற்சாலையில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவர்களின் கல்விச் செலவு அரசு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அருப்புக்கோட்டையில் சிப்காட்:
இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தனி நிதியம் உருவாக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது. மேலும், விருதுநகர் மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, அருப்புக்கோட்டை பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் ரூ.350 கோடி செலவில் சிப்காட் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகரில் முதல்வர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்: