Savukku Shankar Arrested: சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. காரணம் என்ன தெரியுமா?!

யூடியூபர் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் மதுரை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Savukku Shankar (Photo Credit: @SavukkuOfficial X)

டிசம்பர் 17, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் நிலவும் அரசியல், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான முரண்பாடு, ஊழல் விவகாரங்கள் குறித்து பேசி, அரசியல்புள்ளிகளை சர்ச்சைக்குரிய வகையில் வம்பிழுத்து வழக்கு வாங்கி சிறையில் இருக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர் (Savukku Shankar). முன்னாள் தமிழ்நாடு அரசுப்பணியாளரான இவர், வழக்கு ஒன்றில் சிக்கிய பின்னர் அதனை இழந்தார். இதற்குப்பின் முழுநேர அரசியல் விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

யூடியூபில் சர்ச்சை கருத்து:

இதனிடையே, கடந்த ஆண்டு அரசியல் ரீதியான கருத்து மோதலில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்ததும் தனது யூடியூப் சேனலில் பல்வேறு புதிய விடீயோக்களை பதிவு செய்து வந்தவர், அவ்வப்போது சில தனியார் யூடியூப் சேனலின் விவாதங்களிலும் கலந்துகொண்டார். அப்படியாக ரெட்பிக்ஸ் எனப்படும் யூடியூப் சேனல் விவாதத்தில் கலந்துகொண்டபோது, தமிழ்நாடு காவலர்கள் குறித்தும், ஐபிஎஸ் அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். Chennai Airport: வயிற்றுக்குள் மாத்திரைகள்.. ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் கைது.. சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிரடி.!

இதனால் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின் அடுத்தடுத்த வழக்குகள் அவரின் மீது பாய்ச்சப்பட்டு தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலைக்கு சவுக்கு சங்கர் தள்ளப்பட்டார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது.

கஞ்சா வழக்கு:

இதனிடையே கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, தேனாம்பேட்டையில் வைத்து தேனி காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.