Spicejet Anger Response to Passengers: திமிராக பதிலளித்த SpiceJet பணியாளர்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட யூடியூபர் Cherry Vlogs..! விமான நிலையத்தில் நடந்தது என்ன?.. பரபரப்பு வாக்குவாதம்.!

வேலை விஷயமாக கொல்கத்தா செல்லவிருந்த யூடியூபர் SpiceJet விமானத்தில் அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, அவர்களின் செயல்பாடுகளால் அதனை இரத்து செய்து Indigo விமான நிலையத்தில் புறப்பட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை யூடியூபர் விடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.

YouTuber Cherry Vlogs / SpiceJet (Photo Credit: Facebook / Wikipedia Commons)

ஜனவரி 26, சென்னை: முகநூல், யூடியூபில் பல பின்தொடர்பாளர்களை கொண்டு அங்கீகரிக்கப்பட்ட இலட்சக்கணக்கானோரில் Cherry Vlogs என்பவரும் பிரபலமான நபர் ஆவார். இவர் சமீபத்தில் SpiceJet விமான விமானத்தில் கொல்கத்தா செல்ல முன்பதிவு செய்திருந்தார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் சென்றிருந்தார்.

அப்போது, விமானம் கடுமையான வானிலை காரணமாக தாமதமாகியுள்ளது. காலை 8 மணிக்கு புறப்படவேண்டிய விமானம், நேரங்களை கடந்துகொண்டு சென்றுள்ளது. இதனால் அவ்விமானத்தில் கொல்கத்தா செல்ல முன்பதிவு செய்திருந்த Cherry, விமான அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு சரியான பதில் அளிக்க மறுத்த SpiceJet பணியாளர் கனலரசன் என்பவர், செர்ரியிடம் வாக்குவாதம் செய்து அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனால் லேசான ஆத்திரத்திற்கு உள்ளாகிய Cherry, நடப்பதை விடியோவாக பதிவு செய்து கொண்டுள்ளார்.

அவர் வீடியோ எடுக்கிறார் என்பது தெரிந்தவுடன் சுதாரித்துக்கொண்ட விமான பணியாளர், தனது வார்த்தைகளை அப்படியே நாவில் வைத்துக்கொண்டு அமைதியாக பேசுவதுபோல சமாளித்தார் என செர்ரி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இறுதியில் உங்களை விமானத்தில் பயணிக்க விடாமல் தடை செய்திடுவேன் எனவும் அதிகாரி மிரட்டியுள்ளார். Sea Horse Seized: உலர்ந்த நிலையில் 5 கிலோ கடல் குதிரைகள் வனப்பகுதி வழியாக கடத்தல்.. தட்டிதூக்கிய அதிகாரிகள்.!

நேரம் செல்லச்செல்ல பொறுத்து பார்த்த செர்ரி, தனது SpiceJet விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, Indigo விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்க தயாராகியுள்ளார். இவை அனைத்தையும் தனது வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இது SpiceJet விமான பயணிகளிடையே லேசான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், செர்ரியின் வீடியோ கமெண்டில் பலரும் SpieceJet நிறுவனம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, Indigo நிறுவனத்தை பாராட்டி இருக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 26, 2023 10:43 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement