Chartered Accountant: ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிஏ தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மையம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

CA Exam Training by TN Govt (Photo Credit: @TNDIPRNews X)

நவம்பர் 02, தலைமை செயலகம் (Chennai News): பட்டைய கணக்காளர் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் இளநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டு தேர்வில், தேர்ச்சி பெற தாட்கோ சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. Electrocution Death: மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி., மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் துயரம்.! 

இணையதளத்தில் முன்பதிவு செய்ய:

சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 100 ஆதிதிராவிட மாணவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். இதற்கான தகுதிகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் தகுதியாக இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி தாட்கோ மூலமாகவே ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். தகுதியும், திறமையும் உடைய மாணவர்கள் இப்பயிற்சியில் சேர தாட்கோவின் இணையதளத்தில் www.tahdco.com முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.