TN 11th Result 2023: அதிரடியாக வெளியானது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்.. முழு விபரம் இதோ..!

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

TN School Student File Pic (Photo Credit: DTNext)

மே 19, சென்னை (Chennai): தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி நடைபெற்ற 11ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள், ஏப்ரல் மாதம் 5ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியான இன்று மதியம் 2 மணியளவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் மாணவ-மாணவியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கூறிய இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து, அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Jharkhand IED Child Died: நக்சல்கள் வைத்த IED பாம் வெடித்து 10 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 90.94% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வை எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பாடவாரியாக தமிழில் 9 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வேதியியல் பாடத்தில் 107 பேரும், உயிரியல் படத்தில் 65 பேரும், தாவரவியல் பாடத்தில் 15 பேரும், விலங்கியல் பாடத்தில் 34 பேரும் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தேர்வை எழுதிய மாணவர்களில் 86.99% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளில் 94.36% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.