H Raja: "திருமாவளவனுக்கு அதைப்பற்றி பேச தகுதி இல்லை" - எச்.ராஜா பாய்ச்சல்..!

அருந்ததியர் இட ஒதுக்கீடு குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதி இல்லை என எச். ராஜா கட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.

BJP H Raja | VCK Thol. Thirumavalavan MP (Photo Credit: @HRajaBJP / @Thirumaofficial X)

அக்டோபர் 24, திருச்சி (Trichy News): திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பாஜக தமிழ்நாடு (Tamilnadu BJP) மாநில மூத்த தலைவர் எச்.ராஜா (H Raja), செய்தியாளர்களை சந்தித்தபோது பல்வேறு கேள்விகள் குறித்த தனது பதில்களை பதிவு செய்தார். இதுதொடர்பாக எச். ராஜா அளித்த பேட்டியில், "திருமாவளவன் (Thirumavalavan) பட்டியல் சமுதாயத்திற்கான தலைவர் அல்ல. இதனை நான் பலமுறை, பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டில் திருமாவளவன் பயன்படுத்திய வார்த்தைகளை, ஏனைய பிற சமுதாயத்திற்கு எதிராக அவர் பயன்படுத்திய வார்த்தையை, யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.

இந்துவை பிளவுபடுத்தும் செயல்:

அவர் பேசிய சரக்கு மிடுக்கு பேச்சு தொடங்கி, அவர் பேசிய பல விஷயங்களை என்னால் கூற இயலாது. பெண்களை இழிவுபடுத்தி, ஆண்களை ஆண்மையற்றவர்கள் என பேசிய மோசமான நபர். அவர் தகுதியற்ற நபர். அந்நிய மதத்தின் கைக்கூலியாக செயல்பட்டு, தமிழ்நாட்டில் ஹிந்து சமூகத்தை பிளவுபடுத்தும் செயலில் ஈடுபடுகிறார்கள். சி. சுப்பிரமணியம் காலத்தில், அவர் பல கருத்துக்களை இட ஒதுக்கீடு குறித்து கூறி இருக்கிறார். அவருக்கு இட ஒதுக்கீடு ஒரே அளவில் தொடர் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. Drunken Man Atrocity: ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி.. குழந்தைபோல அடம்பிடித்து அடாவடி.. திருப்பூரில் பகீர்.! 

அருந்ததியர் (Arunthathiyar Reservation) இட ஒதுக்கீடு விவகாரம்:

ஒரு தலைமுறை இட ஒதுக்கீடை அனுபவித்து முன்னேறி இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அடுத்தபடியாக இட ஒதுக்கீடால் பயன்படாத நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். அதே அடிப்படை வைத்தே பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், அருந்ததியினர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதி அதனை வழங்கினார். அவர் வழங்கிய உள் ஒதுக்கீடு நியாயம் என பலரும் கூறினார்கள். ஆனால், திருமாவளவன் நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றத்தில் தீர்ப்பும் மாநில அரசுக்கு ஆதரவாகும், உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் வழங்கப்பட்டுள்ளது.

திருமாவளவனுக்கு தகுதி இல்லை:

பட்டியல் வெளியேற்றம் வேண்டும் என விரும்பி கோரிக்கை வைக்கும் தேவேந்திர குல வேளாளர் (Devendra Kula Vellalar) சமுதாயத்தினர், 5 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பேரணி நடத்தும்போது அதனை தொடங்கி வைத்தவன் நான். பட்டியல் வெளியேற்றத்தை விரும்பும் நபர்கள், திருமாவளவனை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களையும், அருந்ததியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்ப்பதும் திருமாவளவன். நீங்கள் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள்?. மதம் மாற்றுவதற்கு நடைபாவாடை விரிக்கும் தலைவரே நீங்கள் (திருமாவளவன்). வேறு எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை, நீங்கள் தலைவரும் இல்லை" என பேசினார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement