TN Govt Advice to Foreign Job Travellers: வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை; முழு விபரம் உள்ளே.!
தமிழர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்களை சட்டவிரோத செயலில் பணியமர்த்தும் அதிர்ச்சி சம்பவம் தற்போது அம்பலமாகி இருக்கிறது. இதனால் வெளிநாடு செல்வோருக்கு அரசு அறிவுரை வாங்கி எச்சரித்து இருக்கிறது.
மே 26, சென்னை (Chennai): சமீபமாகவே தொழில்நுட்ப பணி என்ற பெயரில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இளைஞர்களை குறி வைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கான அழைத்துச் சென்று, சட்டவிரோத செயலில் ஈடுபட வற்புறுத்தும் செயலானது அதிகரித்து வந்தது. இது தொடர்பாக புகார் அளிப்பட்டு, அயலகத்தில் சிக்கி இருந்த 83 தமிழர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்தன. இந்நிலையில், அயலகத் தமிழர் நலத்துறை, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கான எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத செயல்களை ஈடுபட வற்புறுத்தல்: இது தொடர்பான அறிவிப்பில், "அண்மைக்காலமாக தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், எளிமையான முறையில் நேர்காணல் செய்து குறைந்தபட்ச தட்டச்சு அறிவு இருக்கும் நபர்களிடம் ஆசையாக பேசி, அதிக சம்பளம், தங்குமிடம் இலவசம் என வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். பின் சட்டவிரோத முறைகளில் அவர்களை அந்நாடுகளில் குடியமர்த்தும் கும்பல், சட்டவிரோத செயலில் ஈடுபட வற்புறுத்துகிறது. அதனை கேட்காதவருக்கு சித்திரவதை போன்ற செயல்களும் தொடர்கிறது. Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்; கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!
அழைப்பை உறுதி செய்யாமல் வெளிநாடு செல்ல வேண்டாம்: இதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல் குறித்து அரசு விசாரணை நடத்தி வந்தாலும், அயலகம் செல்லும் நபர்கள் தங்களின் விசா மற்றும் வேலை வாய்ப்புக்கான சான்றிதழ் போன்ற தகவல்களை வைத்து தூதரகத்தில் அது குறித்த தகவலை உறுதி செய்து பின் பயணத்தை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள, இந்திய தூதரகத்தின் அலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றுக்கு தொடர்பு கொண்டு சரிபார்க்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி செயல்பட்டால் கம்பி எண்ணுவது உறுதி: அதேபோல, வெளிநாடு வேலைவாய்ப்பு தொடர்பான விவகாரத்தில் உண்மை தன்மையை கண்டறிந்து கொள்ள தொடர்பு எண்களும் இத்துடன் இணைக்கப்படுகிறது. மத்திய அரசின் அனுமதி இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் மற்றும் அவரது நிறுவனங்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரிக்கப்படுகிறது.
அவசர அழைப்புகளுக்கு: வியட்னாம் நாட்டிலுள்ள தூதரகம் 856 2055536568 மின்னஞ்சல் Cons.vietianne@mea.gov.in ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். கம்போடியா நாட்டில் உள்ள தூதரகத்திற்கு Cons.phnompehh@mea.gov.in அல்லது Visa.phnompehh@mea.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் இணையப்பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர்த்து இந்தியாவுக்குள் இருந்து விசா மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பான சந்தேகத்தை கேட்டறிய 18003093793 என்ற எண்ணுக்கும், வெளிநாட்டில் இருப்போர் 8069009901 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)