TN SSLC Results 2024 On tnresults.nic.in: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அரியலூர் டாப்... வெற்றியை தட்டித்தூக்கிய மாணவிகள்.. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு.!

கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

SSLC 10th Result Tamilnadu (Photo Credit : https://tnresults.nic.in/ / @HTTimes X)

மே 10, சென்னை (Chennai): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் கீழ், 2023 - 2024 ம் கல்வியாண்டில் பயின்ற 10 வகுப்பு மாணவர்களுக்கான (SSLC Results 2024) அரசு பொதுத்தேர்வு முடிவுகள், மே 10 இன்று வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 08ல் தேர்வுகள் அனைத்தும் நிறைவுபெற்ற நிலையில், 8 இலட்சம் மாணவர்கள் (10th Exam Results) தேர்வை எழுதினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. PM Modi Mourning On Sivakasi Fireworks Factory Accident: 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து; பிரதமர் மோடி இரங்கல்.! 

முடிவுகளை தெரிந்துகொள்ள வழிமுறைகள் & ஏற்பாடுகள்: தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசின் https://tnresults.nic.in/, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையப்பக்கங்களுக்கு சென்றும் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுசீட்டில் பதிவு செய்த செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக பாடவாரியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். https://tnresults.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பார்ப்போர், தங்களின் தேர்வு சான்றிதழை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து, பின் அதனை பிரிண்ட் அவுட்டும் எடுத்துக்கொள்ளலாம். தேர்வு முடிவுகளை மாவட்ட நூலகங்கள், பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள் ஆகிய இடத்திலும் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. PM Modi Mourning On Sivakasi Fireworks Factory Accident: 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து; பிரதமர் மோடி இரங்கல்.! 

முடிவுகள் விபரம்: தேர்வு முடிவுகளின்படி, தேர்வெழுதிய 8,94,264 இலட்சம் மாணாக்கர்களில், மொத்தமாக 91.55 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக 4.47 இலட்சம் மாணவர்களில் 3,96,152 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 4.47 மாணவிகளில் 4,22,591 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53 ஆகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58 % ஆகும். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.91% அதிகம் ஆகும். கடந்த ஆண்டை விட 1.16% தேர்ச்சி விகிதம் அதிகம் ஆகும்.12,566 கல்வி நிறுவனங்களில், 4105 முழு அளவிலான தேர்ச்சி சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகளில் 1364 பள்ளிகள் முழு அளவிலான தேர்ச்சி பெற்றுள்ளது. பாடவாரியாக தமிழில் 8 பேர், ஆங்கிலத்தில் 415 பேர், கணிதத்தில் 20,691 பேர், அறிவியலில் 5104 பேர், சமூக அறிவியலில் 4,428 பேர் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 13510 மாற்றுத்திறன் கொண்டவர்கள் தேர்வு எழுதி, 12491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 260 பேர் தேர்வெழுதி 228 தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக அரியலூர் மாவட்டம்  முதலிடத்தில் 97.31% அதிக தேர்ச்சி பெற்றுள்ளது. சிவகங்கை 97.02% இரண்டாவது இடத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சி  பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்த தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வை எழுதி இருக்கின்றனர். வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் துறைசார் அதிகாரிகள் முடிவுகளை வெளியிட்டனர்.