Special Bus for Weekend: வார இறுதி, அமாவாசை தினங்கள்.. கிளம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.!
அவை குறித்த விரிவான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
ஜூலை 05, கிளாம்பாக்கம் (Chennai News): தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த பலரும் கல்விப்படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களுக்காக தினமும் வந்து செல்கின்றனர். இவர்களில் பல இலட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வரும் நிலையில், வார இறுதியை (Weekend Days) கணக்கில் எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம்.
அரசு சார்பில் சிறப்பு (Special Bus) பேருந்துகள் உதவி:
இவ்வாறான பயணிகள் தங்களின் பயணத்திற்கு இரயில்கள், அரசு / தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வது உண்டு. இதனிடையே, தற்போது அதிகரித்து வரும் மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்து சேவை வழங்கப்படுவதால், பயணிகள் சிரமம் இன்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். Team India T20 World Cup Victory Parade: உலகமே வியக்கும் பிரமாண்ட பேரணி.. கையில் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் அணிவகுப்பு..!
இன்று 470 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தென்மாவட்டங்கள் செல்ல கூடுதலாக 470 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, திருப்பூர், கோவை, ஈரோடு, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப அந்தந்த போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகளை இயக்கவும் மண்டல வாரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் சென்னை வரவும் நடவடிக்கை:
இன்று முதல் 7 ம் தேதி வரையில் தினமும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை 210 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை உட்பட தங்களின் இலக்கை நோக்கி பயணிக்க ஞாயிற்றுக்கிழமையில் நெல்லை, மதுரை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.