Two Women Marry The Same Guy: அடுத்தடுத்த நாட்களில் 2 திருமணம்.. வரதட்சணை கொடுமை வேறு.. பிரின்சின் அட்டூழியம்..!
திருவள்ளூரில் அடுத்தடுத்த நாட்களில் 2 திருமணம் செய்த இளைஞரின் அட்டூழியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 25, திருவள்ளூர் (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை எடுத்த திருநின்றஊரைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் கேளம்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்த பிரின்ஸ் என்பவரோடு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் இருவருக்கும் காதலாக மாறி உள்ளது. 2022 ஆம் ஆண்டு பிரின்சும் இன்ஸ்டா காதலியும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்துள்ளனர். பிரின்ஸ் நகை, பணம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. Mining Operators Case: கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி..!
மேலும் மனைவியைப் பிரிந்து பிரிண்ஸ் தனது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 19ஆம் தேதி மனைவி பிரின்ஸ் வீட்டிற்கு சென்ற போது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அதுவும் பதிவு திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளை வேறொரு பெண்ணோடு திருமணமானதும் தெரியவந்துள்ளது. இதை பற்றி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)