IPL Auction 2025 Live

TN Weather Report: தமிழத்திற்கு மழை வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Rains Cloud (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 29, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "தமிழகத்தில் ஓரிருஇடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் கன்னியாமைரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது." என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. Tesla Plant in India: இனி இந்தியாவிலும் டெஸ்லா.. ஜனவரியில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிலும் குறிப்பாக மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.