Elon Musk (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 29, குஜராத் (Gujarat): உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக டெஸ்லா விளங்குகிறது. அமெரிக்க எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, உலகின் பல நாடுகளில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனைகளை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இன்னமும் டெஸ்லா தனது மார்க்கெட்டை துவங்கவில்லை. Kyiv Missile Strike: உக்ரைன் நகரங்கள் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்; ஆண்டுகள் கடந்தும் தொடரும் உக்ரைன் - ரஷியா போர்.!

இந்தியாவிற்கு வரும் டெஸ்லா: இந்நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் சந்தையை துவங்க உள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலைகளை அமைத்து வாகனங்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் ஈர்ப்பு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அம்மாநிலத்தில் டெஸ்லா ஆலை அமைய உள்ள தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேரடியாக வந்து கலந்து கொண்டு அறிவிப்பார் என கூறப்படுகிறது.