TN Weather Report: தமிழத்திற்கு மழை வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Chennai Rains Cloud (Photo Credit: Twitter)

ஜனவரி 04, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும், ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (The Indian Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Iran Bombing: ஈரானை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பு.. 103 பேர் பலி..!

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று தமிழகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதே நேரம் நாளை, லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.