HC On Non Hindus In Mandir: இந்து அல்லாதவர்களுக்கு இனி பழனி கோயிலில் அனுமதி இல்லை.. உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு..!
இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜனவரி 30, பழனி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு (Palani Temple) தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இச்சட்டம் ஆனது இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தப் பலகைகள் நீக்கப்பட்டது. World Leprosy Day: உலக தொழுநோய் தினம்.. அதன் அறிகுறிகள் என்ன?. அதன் முழுவிபரம் இதோ..!
உயர் நீதிமன்றம் மதுரை (High Court on Non Hindus in Mandir) கிளை அதிரடி தீர்ப்பு: இதை அடுத்து பழனி கோவிலில் இந்து அல்லாதவர்களை கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது அதற்கான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய கோவிலில் அதற்கென பதிவேடு ஒன்று வைக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. மாற்று மதத்தை சார்ந்தவர்களிடம் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்று உறுதிமொழி எழுதி வாங்கிய பின்னரே அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.