வானிலை: தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chennai Rains (Photo Credit: @LetsXOtt X)

நவம்பர் 25, சென்னை (Chennai News): பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.நேற்றைய நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையில் இருத்து 1,050 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

வானிலை (Weather):

இன்று (25-11-2024) இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்ற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும். மேலும் நாளை, நாளை மறுநாள் (நவ. 26, 27) ஆகிய 2 நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Reporter Dies: 33 வயதில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்.. தந்தையை இழந்து தவித்தவர், உடல்நலக்குறைவால் மரணம்.!

நாளை (நவ. 26), மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், காரைக்கால் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy):