Red Planet Day (Photo Credit: LatestLY)

நவம்பர் 28, டெல்லி (Special Day): பூமியில் வசிப்பவர்கள் பல தலைமுறைகளாக நமது அடுத்த அண்டை கிரகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒன்று தான் செவ்வாய் கிரகம். சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து உள்ள கோள் செவ்வாய். சிவப்பு கோள் (Red Planet) என அழைக்கப்படுகிறது.

வரலாறு: 1964 நவ. 28ல் அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா', 'மரைனர் 4' விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. இந்த விண்கலம் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. மேலும் இந்த வெண்கலம் செவ்வாயின் முதல் புகைப்படத்தினை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதனை அங்கீகரிக்கும் விதமாக விண்கலன் ஏவப்பட்ட நாளினை சிவப்பு கிரகத்தினமாக (Red Planet Day) கொண்டாடி வருகின்றோம். Astrology: 2025 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

சிவப்பு நிறத்திற்கான காரணம்: துருபிடித்த நிறத்திலான இரும்பு தாதுகளை கொண்டிருக்கும் பல்வேறு பாறைகளும், சிவப்பு பழுப்பு நிறத்திலான பாலைவனமும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இதனாலேயே செவ்வாய்க்கிரகம் எழுபது சதவீதம் சிவப்பு நிறமாக உள்ளது. இங்கு அடிக்கடி ஏற்படும் புயல், மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு மாசை வளிமண்டலத்தில் நிரப்பிவிடும். மேலும் செவ்வாய்க் கிரகத்தில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதனால் மாசுக்கள் நீண்ட நாட்கள் வானில் அப்படியே இருக்கும். இதனாலே செவ்வாய்க்கோள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது.