ASTRO (Photo Credit: Pixabay)

நவம்பர் 29, சென்னை (Astrology Tips): மிதுனம் மற்றும் கடக ராசியில் இருக்கும் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களே, கோச்சார அடிப்படையில் கடந்த ஓர் ஆண்டாக பெரிய பாதிப்புகளும் இல்லை. சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகளும் கிடையாது. சலனமற்று ஓடும் நீரோடை போல நிதானமாக சென்று கொண்டிருக்கின்றது உங்கள் வாழ்க்கை. வரும் சித்திரை மாத முதல் நீங்கள் எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் முன் யோசனை செய்து அந்த செயலை செய்யுங்கள். வீண் பிரச்சனைகள், கடன் நெருக்கடி, தொழில் முடக்கம், ஆரோக்கிய குறைவு, குடும்பத்தில் பிரச்சனைகள், மன உளைச்சல்கள் போன்றவை ஏற்படலாம்.

தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலை வரும் பங்குனி மாதம் வரை தொடரும் அதன் பின் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் ஒரு சில கிரகங்களின் நல்ல பார்வைகளாலும், நல்ல அமைப்புகளாலும், உங்களுக்கு வரும் பிரச்சனைகளை சமாளித்து வருவீர்கள். சித்திரை மாதத்திற்கு மேல் எந்த புதிய முயற்சியிலும் இறங்க கூடாது. அரசு அதிகாரிகள் பங்குனி மாதம் முதல் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புகார்களில் சிக்குவது, மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவது, சஸ்பெண்ட் செய்யப்படுவது போன்ற பிரச்சனைகளில் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள், இந்த பங்குனி மாதத்திற்குள் அமையலாம். அதற்குப்பின் புதிய வாய்ப்புகள் இந்த ஆண்டு அமைவது சிரமமே. அப்படி புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். சில நேரங்களில், சித்திரை மாதத்திற்கு மேல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் கூட போகலாம். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுபவர்களுக்கு வரும் பங்குனி மாதம் வரை ஓரளவு நல்ல முன்னேற்றம் உண்டு. அதன்பின் ஷேர் மார்க்கெட்டில் ஒரு ஆறு மாதத்திற்கு வர்த்தகம் செய்யாமல் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகள் பதவிகள் பறிக்கப்படலாம். புகழ் பெருமைக்கு பாதிப்பு ஏற்படலாம். வீண் பிரச்சனைகளில் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதனால் எந்த ஒரு கருத்தையும் வெளியிடாதீர்கள். அரசியல் களத்தில் வரும் சித்திரை மாதம் முதல் அமைதியாக கடந்து செல்வது உங்களுக்கும் உங்கள் பதவிக்கும் நல்லது. தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் அனாவசியமாக எவருடனும் யாரைப் பற்றியும் புகார் சொல்வதோ பிறரைப் பற்றி அவதூறு சொல்வதோ கூடாது. நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை இழப்பை கூட ஏற்படுத்திவிடும். வயதானவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்கள் கவனத்துடன் வேலைகளில் ஈடுபட வேண்டும். சிறிய விபத்துக்கள், காயங்கள் ஏற்படலாம். வரும் பிரச்சனைகளை பொறுத்து கோயிலுக்கு செல்வதற்கு கூட உங்களுக்கு மனம் இருக்காது. தெய்வத்தை நிந்தனை செய்யாதீர்கள்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினைகளை தீர்க்கும். சிவ வழிபாடு பிரச்சனைகளை தூள் தூளாக்கும். தினந்தோறும் கோளறு பதிகம் படிப்பது மிகச்சிறந்த பலனை தரும். வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு முறை திருநள்ளாறு சென்று வந்தால் கெடு பலன்கள் முற்றிலும் குறைந்து விடும்.

உங்கள் மதிப்பெண் 50.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.