நவம்பர் 28, கிறைஸ்ட்சர்ச் (Sports News): நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் (NZ Vs ENG 1st Test, Day 1) அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் இன்று (நவம்பர் 28) தொடங்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. NZ Vs ENG: நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஜாம்பவான்களின் பெயர்கள்.. முழு விவரம் உள்ளே..!
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் (Martin Crowe) மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் (Graham Thorpe) ஆகியோரை கவுரவிக்கும் விதமாக, இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி (Crowe-Thorpe Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இதில், முக்கிய சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் டாம் லேதம் - கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அப்போது, லேதம் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 34, மிட்செல் 19, பிளென்டல் 17 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம்சன் (Kane Williamson) 93 ரன்களில் விக்கெட்டை இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் அடித்துள்ளது. நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் 41 ரன்னிலும், டிம் சவுதி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் (Shoaib Bashir) 4, கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
கேன் வில்லியம்சன் அபாரம்:
The Magical straight drives in Test Cricket of Kane Williamson..🤯
— MANU. (@Manojy9812) November 28, 2024