Fengal Cyclone (Photo Credit: mausam.imd.gov.in)

நவம்பர் 26, சென்னை (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணிநேரத்தில் ஃபெங்கால் புயல் (Fengal Cyclone) உருவாகி, வலுப்பெறுகிறது. இந்த புயல் கடந்த 6 மணிநேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிலையில், ஃபெங்கால் புயல் (Fengal Cyclone) நாளை மறுநாள் புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Fengal Cyclone: ஃபெங்கால் புயல் எதிரொலி; கடலூர், நாகை உட்பட 9 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.! 

புயலின் தற்போதைய நிலை:

அக்.30 அன்று கரையை கடக்கவுள்ள ஃபெங்கால் புயல் காரணமாக, இலங்கை, வடதமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் புயல் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 100 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 320 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 490 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ஃபெங்கால் புயல் குறித்த சமீபத்திய அறிவிப்பு: