Cat (Photo Credit: Pixabay)

நவம்பர் 28, மாஸ்கோ (World News): ரஷ்யாவைச் சேர்ந்த 55 வயது நபர் டிமிட்ரி உகின். இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன தனது பூனையான ஸ்டியோப்காவைத் தேடியுள்ளார். தெருவில் பூனையைக் கண்டுபிடித்த பிறகு, டிமிட்ரி அதை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அன்று மாலை பூனை (Cat Bite) இவரது காலில் கடித்துள்ளது. இதனால் இவருக்கு அந்த இடத்தில் இரத்தம் வந்துள்ளது. அவரது மனைவி வீட்டில் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரர் இவருக்கு உதவியுள்ளார். இருப்பினும் ரத்தக் கசிவு அதிகமானதால், ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வரும்முன் அவர் உயிரிழந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததாலும் மருத்துவர்கள் வர தாமதமானாலும் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. Ukraine-Russia War: உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த ஏவுகணை.. தீவிரமடையும் ரஷ்யா- உக்ரைன் போர்.!

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் விலங்கு கடித்தால் ஏற்படும் காயங்களில் 2-50 சதவிகிதம் பூனை கடித்தால் ஏற்படுகிறது, நாய் கடிக்கு அடுத்தபடியாக, பூனை கடித்தால் ரேபிஸ் வைரஸ் தொற்று மற்றும் பார்டோனெல்லா, புருசெல்லா, லெப்டோஸ்பைரா மற்றும் கேம்பிலோபாக்டர் என பல பாக்டீரியா தொற்றுகள் உள்ளன. பூனை கடித்தால் தொற்று பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு நாய் கடியை விட 2 மடங்கு அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.