NIA Raid: அதிகாலையிலேயே பல மாவட்டங்களை அதிரவிட்ட தேசிய புலனாய்வு முகமை; திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக24 இடங்களில் அதிரடி சோதனை.!
அதிகாலை முதலாக திடீரென தொடங்கியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 23, திருபுவனம் (Tamilnadu News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், திருபுவனம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ராமலிங்கம், கடந்த பிப்ரவரி 05, 2019 அன்று கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில், அவர் வசித்து வரும் பகுதிக்கு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட இஸ்லாமியர்களிடம் அவர் பல கேள்விகளை முன்வைத்தால் கொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யக்கூறி பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் உட்பட வலதுசாரி அமைப்புகள் கடும் போராட்டத்தையும் முன்னெடுத்தது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் சார்பில் ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. IND VS BAN Women ODI: டிராவில் முடிந்தது வங்கதேசத்திற்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. சொதப்பிய இந்திய அணி.!
இக்கொலை வழக்கு விவகாரம் தற்போது என்.ஐ.ஏ வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை பல குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களின் தலைக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ராமலிங்கத்தின் கொலைவழக்கில் தொடர்பு இருந்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை உட்பட பல மாவட்டங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிகாலை முதலாக திடீரென தொடங்கியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையால் சம்பந்தப்பட்ட பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Andhra Police: தமிழ்நாட்டு குறவர் பெண்களிடம் ஆந்திர காவல்துறை உச்சகட்ட மனித உரிமை மீறல்; நெஞ்சை பதறவைக்கும் பெண்ணின் கண்ணீர்.!
ராமலிங்கத்தின் கொலை சம்பவம் தொடர்பாக தஞ்சாவூரை மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் மொத்த குற்றவாளிகளின் எண்ணிக்கை 18 பேர் என என்.ஐ.ஏ பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் சோதனை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.