Thisayanvilai Youngster Murder: 20 வயது இளைஞரை கொன்று புதைத்த 16 வயது சிறுவன்.. 3 சிறார்களாக சேர்ந்து காதல் விவகாரத்தில் அதிர்ச்சி செயல்.! திசையன்விளையில் பயங்கரம்.!

20 வயது இளைஞர் காதலித்த பெண்ணை தானும் காதலிப்பதாக வரிந்துகட்டிக்கொண்டு நின்ற 16 வயது சிறுவன், நுங்குவெட்டி சாப்பிட செல்லலாம் என 20 வயது இளைஞரை 2 நண்பர்களோடு சேர்ந்து கொன்று புதைத்த பயங்கரம் திசையன்விளையை அதிரவைத்துள்ளது. ஓராண்டு கழித்து இளைஞர் மாயமான வழக்கில் அதிரடி திருப்பமாய் அமைந்த விசாரணை முடிவுகள் பதறும் வகையில் அமைந்துள்ளது.

Rajendran (Age 20) Died Person - Death Respective Photo

ஜனவரி 21, திசையன்விளை: காதல் பெயரில் சிறுவனின் கொடூர எண்ணம் செயல்படுத்தப்பட்டதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை (Thisayanvilai, Tirunelveli), செல்வமருதூரில் வசித்து வருபவர் தங்கதுரை. இவரின் மகன் ராஜேந்திரன் (வயது 20).இவர் பாலிடெக்னீக் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் ராஜேந்திரனை (Polytechnic College Student Rajendran Missing) பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த விஷயம் தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் (Thisayanvilai Police) அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. மாயமான ராஜேந்திரனை தேடி வந்த காவல் துறையினர், 16 வயது சிறுவனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி விடுவித்துள்ளனர். இதற்கிடையில், சிறுவன் காவல் துறையினர் தன்னை ராஜேந்திரன் கொலை தொடர்பாக விசாரிக்க அழைத்தார்கள் என நினைத்தேன், ஆனால் அதற்கு இல்லை என பேசியுள்ளார். Telangana ATM Robbery CCTV: ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிச்சென்ற கொள்ளையர்கள் – சி.சி.டி.வி காட்சிகள் வைரல்..!

Representative Image: Death (Photo Credit: PTI)

இதனையடுத்து, காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து, மீண்டும் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ராஜேந்திரன் கொலை மர்மம் விலகியது. அதாவது, ராஜேந்திரன் மற்றும் 16 வயது சிறுவன் ஒரே பெண்ணை (16 Age Minor Boyz Team Killed Rajendran Love Issue) காதலித்து இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பான தகராறில் சிறுவன் ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தனது திட்டத்தை செயல்படுத்த நண்பர்களான 16 வயது மற்றும் 14 வயது சிறார்களை கூட்டு சேர்த்துக்கொண்டு சிறுவன், ராஜேந்திரனை நுங்கு வெட்டி சாப்பிட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசூர், தேரி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, பனைமர குழியில் ராஜேந்திரனின் உடலை போட்டு புதைத்து அங்கிருந்து வந்துள்ளார்.

பின்னர், காவல் துறையினர் ராஜேந்திரன் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, எதுவும் தெரியாமல் நடித்துள்ளார். இறுதியில் உண்மையை அறிந்த காவல் துறையினர் சிறுவனை சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேரில் அழைத்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 21, 2023 09:39 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement