Affair Couple Suicide: கள்ளக்காதல் உறவை கைவிட இயலாமல் பரிதவிப்பு; இருதரப்பு உறவினர்கள் கண்முன் ஜோடி தற்கொலை.!

கள்ளக்காதல் வயப்பட்ட ஜோடி, தங்களின் குடும்பத்தினர் கண்முன்னே கிணற்றில் பாய்ந்து அடுத்தடுத்து உயிரை மாய்துகொண்ட சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

Illegal Affair Suicide (Photo Credit: Pixabay)

அக்டோபர் 31, வாணியம்பாடி (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி (Vaniyambadi) பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 35), இவர் கூலி தொழிலாளி ஆவார். சந்திரசேகரின் மனைவி அனிதா (வயது 32). தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உள்ளூரில் வேலை கிடைக்காததால், சந்திரசேகர் பெங்களூர் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு சந்திரசேகருக்கும் - ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆவணங்குப்பம் பகுதியில் வசித்து வரும் தேவராஜ் என்பவரின் மனைவி பூஜா (வயது 26) என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தி கள்ளக்காதல் மலர்ந்த நிலையில், தனிமையில் சந்தித்து பல நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக சந்திரசேகர், பூஜாவை வாணியம்பாடிக்கு அழைத்து வந்து வாடகைக்கு வீடு எடுத்து கணவன்-மனைவியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். Apple's 'State-Sponsored Attack Message: எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் ஸ்மார்ட்போனை உளவுபார்த்த மத்திய அரசு?.. குற்றச்சாட்டும்-ஆப்பிளின் விளக்கமும்.! 

இந்த தகவல் பூஜாவின் உறவினர்களுக்கு தெரியவரவே, நேற்று அவர்கள் வாணியம்பாடி வந்து பூஜாவை தங்களுடன் அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பான நிலையில், காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு பயங்கர சண்டை நடந்துள்ளளது.

இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலனை பிரிய மனமில்லாத பூஜாவும், அங்கிருந்த மற்றொரு விவசாய கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி காவல் துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.