Udhayanidhi Stalin Speech: ஐ.பி.எல் 2023-க்கு டிக்கெட் வாங்கி கொடுங்க; முன்னாள் அமைச்சரின் கோரிக்கையும், உதயநிதியின் பதிலும்.. சிரிப்பலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை.!
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஐ.பி.எல் தொடருக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்தோம், நீங்கள் வாங்கி கொடுங்கள் என இந்நாள் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலால் அவையே கலகலப்பானது.
ஏப்ரல் 12, சட்டப்பேரவை (TN Assembly Session): தமிழ்நாடு சட்டப்பேரவை (TN Assembly) கூட்டத்தொடரில், நேற்று விளையாட்டுத்துறை (Sports Ministry) மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது, அதிமுக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "கடந்த அதிமுக (AIADMK) ஆட்சியின் போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் (IPL 2023) போட்டித்தொடர் பார்க்க சிறப்பு அனுமதி நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டன.
ஆனால், தற்போது யாருக்கும் வழங்கப்படவில்லை. சுமார் 300 முதல் 500 அனுமதி சீட்டுகள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொடுத்ததாக கூறுகிறார்கள். எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கேள்விகளை முன்வைத்தார். இதற்கு தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) அளித்த பதிலாவது,
"அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி (AIADMK S.P. Velumani) ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் கேட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் (Chepauk Stadium) கிரிக்கெட் மைதானத்தில் எந்த போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் வாங்கி தந்தோம் என முன்னாள் அமைச்சர் கூறுகிறார். Myanmar Airstrike: மியான்மரில் இராணுவம் அட்டகாசம்.. 100 பேர் வான்வழி தாக்குதலில் பரிதாப பலி..!
எனது தொகுதியில் உள்ள 150 கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு, சொந்த செலவில் ஐ.பி.எல் போட்டியை காண வழிவகை செய்துள்ளேன். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறது. பி.சி.சி.ஐ தலைவராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இருக்கிறார். நீங்கள் அவரிடம் சொல்லி 5 டிக்கெட் வாங்கி கொடுங்கள். நாங்கள் பணம் கொடுத்து கூட வாங்கிக்கொள்கிறோம்.
அவர் உங்களின் நண்பர். நாங்கள் கூறினால் கொடுக்கமாட்டார். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி, இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோருடனும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் (மு.க ஸ்டாலின்) பவுலிங் போட்டால் யாராலும் அடிக்க முடியாது. ஸ்பின் பந்துவீச்சை திறம்பட மேற்கொள்வர்" என தெரிவித்தார். அமைச்சரின் பேசினால் அவையே சிறிது நேரம் கலகலப்புடன் மகிழ்ந்தது.