IPL Auction 2025 Live

TN BSP Leader K Armstrong Death Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரௌடி திருவேங்கடம் சுட்டுக்கொலை; தனிப்படை காவல்துறை அதிரடி.!

அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற ரௌடி திருவேங்கடம் தனிப்படை காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.

Rowdy Thiruvengatam (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஜூலை 14, மாதவரம் (Chennai News): பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் (K Armstrong Murder Case), கடந்த ஜூலை 05ம் தேதி 8 பேர் கும்பலால் ஆதரவாளர்கள் முன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையில், ரௌடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழிவாங்க எண்ணி, சுரேஷின் சகோதரர் பாலு (Ponnai Balu) என்பவர் சதித்திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியது அம்பலமானது. கிட்டத்தட்ட 6 முறை சதித்திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஏழாவது முறை கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை கோரும் உறவினர்கள்:

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பொண்ணை பாலா (33), திருவேங்கடம் (Rowdy Thiruvengatam) (33), சந்தோஷ் (22), அருள் (33), மணிவண்ணன் (25), ராமு (38), திருமலை (45), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பு தகவலும் அம்பலமானது. ஆனால், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தரப்பில் இவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை. வேறு காரணத்திற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. Trump Rally Shooting: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.! 

ரௌடி திருவேங்கடம் என்கவுண்டர்:

இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, சென்னைக்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. உண்மை குற்றவாளிகளை அரசு கண்டறிந்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிரடி - தொடரும் விசாரணை:

ரௌடி திருவேங்கடத்தை காவல் துறையினர் விசாரணைக்காக சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு திருவேங்கடம் காவல்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அதிகாரிகள் தரப்பில் தாக்குதலை கைவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், திருவேங்கடம் தாக்குதலை தொடர்ந்துள்ளார். இதனால் காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட திருவேங்கடம் உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வடக்குமண்டல காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயரின் தனிப்படை காவல்துறையினர் என்கவுண்டரில் ஈடுபட்டனர்.