TN Weather Update: உருவாகப்போகும் காற்றழுத்தப்பகுதி.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 4, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

நாளைய வானிலை (Tomorrow weather): இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், 06 முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. School Bus Accident: போட்டாபோட்டியால் பயங்கரம்; பள்ளி பேருந்து புளியமரத்தில் மோதி 15 மாணவர்கள் படுகாயம்.!

மீனவர்களுக்கு எச்சரிக்கை: செப்.4 முதல் 8ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.