Gold Silver Price: ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது.. விண்ணைமுட்டும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

தீபாவளி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த வாரத்தில் ரூ.54 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கம் விலை இன்று ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது.

Gold Jewels (Photo Credit: Pixabay)

அக்டோபர் 30, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக - மறைமுகமாக பாதித்து, பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. Chennai Shocker: 22 வயது பெண் ஆசிரியரை உடலெல்லாம் கடித்து வைத்த தலைமை ஆசிரியை.. தனிமை பழக்கம் போதையில் தறிகெட்ட சோகம்.! 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு உயர்ந்த விலை:

இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட சவரன் ஆபரணத் தங்கம், தற்போது அதையும் தாண்டி விற்பனையாகிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.

இன்றைய விலை (Gold Rate in Chennai):

இந்நிலையில், சென்னையில் இன்று (அக்.30) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520 க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையான நிலையில், கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளயின் விலை ரூ.1,09,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சரியாக ரூ.59,000 என இருந்த நிலையில், இன்று ரூ.520 உயர்ந்துள்ளது.

இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement