Vilupuram Tragedy: விழுப்புரம் குவாரியில் வெடி விபத்து, மண் சரிவு.. தொழிலாளர்கள் இருவர் பரிதாப பலி.!
விழுப்புரம் கல்குவாரியில் வெடி வைத்த போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்.
பிப்ரவரி 08, விழுப்புரம் (Vilupuram): விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. அதில் இன்று காலை ஒரு கல்குவாரியில் பள்ளம் தோன்ற வெடி வைத்த போது மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த மண் சரிவில் (landslide) சிக்கி விழுப்புரம் இறையூறைச் சேர்ந்த ஐயனார், சேலத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இச்சம்பவத்தை தெரிந்து அவ்விடத்திற்கு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் விரைந்தனர். இறந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வரை உடலினை எடுக்க மாட்டோம் என்று தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். Woman Damages Cab Door, Walks Away: சாலையில் திடீரென டாக்ஸி கதவை திறந்த பெண்.. ஆட்டோவில் கார் கதவு மோதி விபத்து..!