TVK Alliance: தவெகவுடன் கூட்டணியா?.. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பதில்.!

ஆக்கபூர்வ விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும், பொய்யான பரப்புரைகள் புறந்தள்ளப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

VCK Thirumavalavan | Congress K Selvaperunthagai | TVK Vijay (Photo Credit: @News18Tamilnadu / @INCTamilnadu / @TVKVijayhq X)

நவம்பர் 21, திண்டுக்கல் (Dindingul News): 2026 தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு, அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக மக்களை சந்திக்க ஆயத்தமாகி இருக்கிறார். கட்சி மாநாடு நிறைவுபெற்றதும், அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்சியின் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வரும் கட்சிக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஷயத்தை முன்னிறுத்தி வரவேற்பு பெற்றார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2026 தேர்தல்:

இதனால் மாநில அளவில் மிகப்பெரிய கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படும் திமுக, அதிமுக, பாஜக கூட்டங்களில் சலசலப்பு அலை உண்டாகி இருக்கிறது. திரைமறைவில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் 2026 தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை அரசியல்மட்டத்தில் தரலாம் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். Tirupur Subramaniam: "யூடியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைய, ரிவியூ எடுக்கத்தடை" - திரையரங்கு உரிமையாளர் நிர்வாகம் அறிவிப்பு.! 

VCK Preisdent Thirumavalavan at Palani Murugan Temple (Photo Credit; @rajtweets10 X)

விசிக திருமாவளவன் பதில்:

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட பழநியில் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம், செய்தியாளர்கள் "விஜயுடன் கூட்டணியா?" என கேள்வி எழுப்பியபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என திருமாவளவன் எம்.பி கூறினார். மேலும் பேசிய அவர், "வாய்க்கு வந்தபடி வன்மத்தை கக்குவது நல்லதல்ல, ஆக்கபூர்வமான விமர்சனத்தை வரவேற்போம்., அவதூறுகளை புறந்தள்ளுவோம்" என கூறினார்.

செல்வப்பெருந்தகை பதில்:

அதேநேரத்தில், தென்காசியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி இல்லை. இண்டி (INDI Alliance) கூட்டணி வலுவுடன் இருக்கிறது" எனக் கூறிச் சென்றார்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif