Velankanni Cathedral Festival: வேளாங்கண்ணி பேராலய திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Velankanni Cathedral Festival (Photo Credit: @Richard_mkm X)

ஆகஸ்ட் 29, வேளாங்கண்ணி (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா (Velankanni Cathedral Festival) ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேளாங்கண்ணி (Velankanni Church) பேராலய திருவிழாவில் கலந்துகொள்ள, வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள்.

திருவிழா கொடியேற்றம்:

இன்றைய தினம் தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். கொடியேற்றத்தைக்காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி வேளாங்கண்ணியில் ஆய்வு பணிகள் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் விவரித்தார். Bomb Threat: ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மாணவர்களுக்கு விடுமுறை..!

பாதுகாப்பு பணிகள்:

கொடியேற்றத்தை (Festival Flag Hoisting) முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3000-திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் பொதுமக்கள் இறங்காமல் இருக்கவும் குளிக்க தடை விதித்தும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவை பாதை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 06-ஆம் தேதியும், மறுநாள் (செப்டம்பர் 07) தேர் பவனியும் நடைபெறுகிறது.