Rajapalayam Shocker: ரூ.50 கோடி சொத்துக்காக காளீஸ்வரியின் கபடநாடகம்.. முதலாளியின் கர்ப்பத்தில் தொடங்கி, மாஸ்டருடன் கள்ளக்காதலில் முடிந்த கொலை..!

வேலைக்கு வந்த பெண்ணிடம் காதல் வளர்த்த முதலாளி, மனைவியை நம்பி புதிய வாழ்க்கையை தொடங்கிய 2 ஆண்டுகளில் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ள பகீர் சம்பவம் நடந்துள்ளது.

Accuse Kaliswari | Victim Siva Kumar (Photo Credit: Facebook)

நவம்பர் 16, இராஜபாளையம் (Virudhunagar News): முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்த நபர், வேலைக்கு வந்த பெண்ணை வீட்டுக்காரியாக்கியதன் விளைவாக, இனிப்பகத்தின் உரிமையாளர் கொடூரமாக வீழ்த்தப்பட்ட பயங்கரத்தை பதைப்பைப்பு சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam, Virudhunagar) பகுதியில் செயல்பட்டு வரும் ராஜா ஸ்வீட்ஸ் உரிமையாளர் குருசாமி. இவரின் மகன் சிவகுமார். சம்பவத்தன்று ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள தந்தை குருசாமியின் கல்லறைக்கு சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தீபாவளி அன்று இந்த சம்பவம் நடந்தது. சிவகுமாரின் மனைவி காளீஸ்வரி மற்றும் இரண்டு வயது மகன் கண் முன்னே கொலை சம்பவம் நடந்தது.

இந்த விஷயம் தொடர்பாக சிவகுமாரின் இரண்டாவது மனைவி காளீஸ்வரி, இராஜபாளையம் தெற்கு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாமனாரின் கல்லறைக்கு சென்றபோது, அங்கு மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்டபோது நால்வர் கும்பலால் கணவர் கொலை செய்யப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிவகுமாரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோதும், எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆனால், காளீஸ்வரி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் காவல் துறையினர் காளீஸ்வரியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கணவரை ரூ.50 கோடி சொத்துக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கள்ளக்காதல் வயப்பட்ட தகவலும் அம்பலமானது. Emergency SOS via Satellite: ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு நல்ல செய்தி.. சாட்லைட் உதவியுடன் அவசரகாலத்தில் அழைப்புகள் மேற்கொள்ள வசதி அறிமுகம்.! 

இதுதொடர்பான வாக்குமூலத்தில், "கணவர் சிவகுமார் முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நான் ஸ்வீட் ஸ்டாலில் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கர்ப்பமாக்கினார். இதனையடுத்து இரண்டாவதாக என்னை மணமுடித்தார்.

இந்த நிலையில், அவ்வப்போது தொழில் விஷயமாக அவர் சென்னைக்கு சென்று விடுவார். அச்சமயத்தில் வீட்டின் அருகே உள்ள காலி மனையில் யோகா மற்றும் சிலம்பம் கற்றுக்கொடுத்த மாஸ்டர் ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது கள்ளத்தொடர்பாக மாறியது.

தொடர்ந்து கணவருக்கு எங்களின் விவகாரம் தெரியவந்து, அவர் என்னை கண்டித்தார். எனக்கு ஐயப்பனுடன் சேர்ந்து வாழ எண்ணம் ஏற்பட்டதால், நான் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி, ஊருக்கு ஒதுக்குப்புறமான மாமனாரின் கல்லறைக்கு செல்லும் வழியில் சிசிடிவி ஏதும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

தீபாவளி அன்று வீட்டிற்கு வந்த கணவரை, மாமாவின் கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்தி வரலாம் என அழைத்துச் சென்று கொலை செய்தேன். இந்த சம்பவத்தில் ஐயப்பன், அவரது நண்பர்கள் விக்னேஷ், மருது பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் காத்திருந்து, கணவர் வந்ததும் அவரின் கழுத்தில் கத்தியை வைத்து வீடு, தோட்டம் உட்பட சொத்துக்களை எனது பெயருக்கு மாற்றித்தர கேட்டோம்.

அவர் மறுப்பு தெரிவித்ததால், கணவரை கொலை செய்து சொத்துக்களை எனது பெயருக்கு மாற்றிவிடலாம் என முடிவெடுத்து, கொலையை அரங்கேற்றினோம். என் மீது சந்தேகம் வரக்கூடாது என முதலில் காவல் நிலையத்தில் மதுபோதை கும்பலால் கொலை என புகார் அளித்தும், அதிகாரிகள் என்னை இறுதியில் கைது செய்துவிட்டனர்" என கூறியுள்ளார். நாடகம் ஆடிய நிலையில் காவல்துறையினர் என்னை கண்டறிந்து விட்டன

விசாரணைக்கு பின்னர் உண்மையை அறிந்த காவல் துறையினர் காளீஸ்வரி, ஐயப்பன், விக்னேஷ், மருதுபாண்டியன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.