Kallakurichi Illicit Liquor: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரம்; முன்னாள் எஸ்.பி விருப்ப பணிஓய்வு ஏன்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம்.!

கெட்டுப்போன மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில், மரணங்களை முன்கூட்டியே கணித்து பணிஓய்வு பெற்று எஸ்.பி சென்றதாக கூறப்படும் விவகாரத்தில், எஸ்.பி அதிர்ச்சி விளக்கம் அளித்துள்ளார்.

Former Kallakurichi SP Mohanraj (Photo Credit: @kalgikumaru / @kavalarvoice X)

ஜூன் 22, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, அவர்களில் மொத்தமாக தற்போது வரை 55 பேர் பலியாகி இருக்கின்றனர். இன்னும் 80 க்கும் அதிகமானோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை:

55 பேரின் உயிரை பறித்த கள்ளச்சாராய மரங்கள் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் முன்னெடுத்தனர். தற்போது வரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட சின்னத்துரை, மாதேஷ், சாகுல் அமீது, ஜோதி, மாதேஸ்வரன், துரைக்கண்ணு உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பல ஆயிரம் மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ்மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். Wife Kidnapped by Husband: 8 நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு பிரிந்து சென்ற மனைவி; பேசப்போராட்டம் கடத்தல் சம்பவமானதால் வழக்கில் சிக்கிக்கொண்ட கணவன்.! 

ஆணையம் அமைப்பு, ரூ.10 இலட்சம் இழப்பீடு:

விஷ சாராய மரணம் குறித்து நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள அதே வேளையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 2023ம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மோகன்ராஜ், தனது பணி நிறைவடையும் 8 மாதங்களுக்கு முன்பே பணி ஓய்வு பெற்றார். இவர் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் என்ற காரணத்தால், அரசியல்கட்சி நிர்வாகியின் மிரட்டலுக்கு பின் ஓய்வுபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

சர்ச்சை விவகாரத்திற்கு முன்னாள் எஸ்.பி விளக்கம்:

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ், "தான் மகளின் உடல்நிலை காரணமாக, அவருடன் இருக்கவே பணிஓய்வை பெற்று வந்தேன். ஆனால், நான் கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவித்ததாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இதற்கு மேலும் அவ்வாறான தகவலை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.