Omegle Website Shut Down: வீடியோ சாட்டிங் செயலி ஓமெக்லீ சேவை நிறுத்தம் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.. பகீர் தகவலை பகிர்ந்த நிறுவனர்.!

நமக்கு இன்றளவில் அறிமுகமான பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), டெலக்ராம் போன்ற செயலிகள் ஒவ்வொருக்கும் தனித்துவமான கொள்கை இருக்கின்றன.

Omegle Shut Down | TN YouTuber Be Like Vicky (Photo Credit: Wikipedia | X | YouTube)

நவம்பர் 09, புதுடெல்லி (Technology News): இணையத்தளம் வளர்ச்சிபெற தொடங்கியதில் இருந்து, மனிதனின் தகவல் பரிமாற்றங்கள் சேவை என்பது பன்மடங்கு முன்னேறிவிட்டது. ஒருகாலத்தில் தகவல் சொல்வதற்கு மாதக்கணக்கு, ஆண்டுக்கு கூட ஆகியது. ஆனால், இன்றளவில் நொடிக்கும் குறைவான வேகத்தில் நாம் விரும்பும் நபருக்கு தகவலை அனுப்புகிறோம்.

பரிணாம வளர்ச்சியின் பல எதிர்கால கண்டுபிடிப்புகளில், நமக்கு பெரும் உதவியாக இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் அதன் வளர்ச்சிகள் நமக்கு பல செயலிகளை தந்தன. இவற்றின் உதவியால், நாம் உலகெங்கும் உள்ளோரைகூட நமது நட்பு வட்டாரத்தில் வைக்கிறோம்.

இந்நிலையில், சமீபத்தில் இளம் வயதினரிடையே அறிமுகமான ஓமெக்லீ (Omegle) வீடியோ கால் சாட்டிங் செயலி, தனது சேவையை 14 ஆண்டுகள் கழித்து நிறுத்திக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது. இது அதன் பயனர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. Bulldozer Rally File Nomination: வேட்புமனுத்தாக்கல் செய்ய வினோத யோசனை: புல்டோஸரில் அணிவகுத்துச்சென்ற பாஜக வேட்பாளர்..! 

ஏனெனில், இந்தியா மட்டுமல்லாது உலகளவில் அறிமுகமான ஓமெக்லீ செயலி, உள்ளர்த்தம் கொண்ட 18+ உரையாடல்களுக்கு பிரபலமாக இருந்தது. நல்ல உரையாடல் சில இருந்தாலும், 18+ உரையாடல்கள் தொடர்பான வீடியோக்களே அதிகம்.

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், இச்செயலியின் வாயிலாக வீடியோ பதிவிட்டு யூடியூப், பேஸ்புக் போன்ற பக்கத்தில் பிரபலமாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், ஓமெக்லீ செயலியின் சேவை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் Leif K Brooks, "அன்புள்ள மர்ம நபர்களே.. ஓமெக்லீ இணையத்தை எங்களால் இதற்கு மேல் வழிநடத்த இயலாது. அதனை பராமரிப்பதற்கும், தொடர்ந்து நடத்துவதற்கும் ஆகும் செலவுகளை இனியும் என்னால் சமாளிக்க இயலாது. எனது இளம் 30 வயதில் நான் மாரடைப்பு, மன அழுத்தம் உட்பட பிற பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இல்லை.

பலரும் எனது ஓமெக்லீ வீடியோ கால் சாட்டிங் செயலியை தவறான செயல்களுக்காக, தவறான முறையில் வழிநடத்துவதை அறிகிறேன். ஆகையால், எனது செயலியை நான் இனி பயனர்கள் பயன்படுத்த இயலாத வகையில், அதன் சேவைகளை நிறுத்துகிறேன். இதுவரை ஓமெக்லீ செயலியை பயன்படுத்திய அனைத்து நபர்களுக்கும் எனது நன்றிகள். ஓமெக்லீ போரில் தோற்றுப்போனாலும், இணையத்திற்கு எதிரான போர் தொடரும்" என தெரிவித்துள்ளார்.