Scam Calls Alert: போலியான மோசடி அழைப்புகளை நம்பாதீங்க; நடிகர் யோகிபாபுவுடன் சென்னை காவல்துறை விழிப்புணர்வு வீடியோ.!
அதனால் வழக்கில் கைதாகாமல் இருக்க பணம் கொடுங்கள் என மிரட்டி பணம்பறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
அக்டோபர் 08, சென்னை (Chennai News): சமீபகாலமாக முதியோர் உட்பட சிலருக்கு வரும் அழைப்பில், மும்பையில் இருந்து பேசுவதாக கூறும் நபர்கள், உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பொருட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன பொருட்கள், போதைப்பொருட்கள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அழைப்பை துண்டிக்கக்கூடாது, நாங்கள் கூறும் விஷயங்களை கேட்டு, ரிசர்வ் வங்கியின் நாங்கள் அனுப்பும் வங்கிக்கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும். Amazon Layoffs: அமேசான் 2025-ஆம் ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. காரணம் என்ன..?
காவலர்கள் போல போலியான அழைப்புகள்:
மாறாக அழைப்பை துண்டித்தால் மும்பை காவல்துறை உங்களை கைது செய்துவிடும் என மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து வந்துள்ளன. மேலும், வீடியோ காலில் காவல் துறை அதிகாரி விசாரணைக்கு அமர்ந்து பேசுவதை போலவே மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை நம்ப வைத்தும் மோசடி நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு, தற்போது வரை ரூ.10 கோடிக்கும் அதிகமான மோசடி பணம் காவல் துறையினரால் திரும்ப பெறப்பட்டுள்ளது.
உடனடியாக புகார் கொடுங்கள்:
இந்த விஷயம் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, சென்னை மாநகர காவல்துறை நடிகர் யோகி பாபுவின் மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில், நடிகர் யோகிபாபு மேற்கூறிய விஷயங்களை தெரிவித்து, மோசடியில் மக்கள் ஏமார்ந்துவிட வேண்டாம். இவ்வாறான அழைப்பை பெற்றால் உடனடியாக 1903 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு புகார் அளிக்குமாறும், பணத்தை இழந்தவர்கள் 24 மணிநேரத்திற்குள் புகார் பதிவு செய்தால் பணத்தை மீட்கும் நடவடிக்கை துரிதப்படும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை காவல்துறையினர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ:
சைபர் குற்றங்களை தடுக்கவும், புகார்களை அளிக்கவும் தொடர்புகொள்க 1903: