அக்டோபர் 07, டெல்லி (Technology News): அமேசான் நிறுவனம் (Amazon) வரும் 2025-ஆம் ஆண்டில் சுமார் 14,000 மேலாளர்களை பணிநீக்கம் (Layoff) செய்யக்கூடும். இதனால், ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்கா டாலர்களை மிச்சப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. இதன் உலகளாவிய நிர்வாக ஊழியர்கள் 1,05,770 பேரில் சுமார் 91,936 ஊழியர்களை குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Lava Agni 3 5G: அசத்தலான அம்சங்களுடன் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!
ஒவ்வொரு ஆண்டும் 2.1 பில்லியன் டாலர் முதல் 3.6 டாலர் வரை சேமிக்கலாம். மேலும், இது அமேசானின் 2025-ஆம் ஆண்டு செயல்பாட்டு லாபத்தில் சுமார் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இருக்கக்கூடும். அமேசான் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பல மேலாளர்களை (Managers) பணியமர்த்தியுள்ளது. இப்போது. பல மாற்றங்களை செய்யவுள்ளது. நிறுவனத்தை முறையாக மேம்படுத்தவும், நிறுவனத்திற்கு லாபத்தை பெற்றுத் தரவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அமேசானின் ஊழியர்களில் 7 சதவீதம் பேர் நிர்வாக பொறுப்புகளில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.