Disney Layoffs: டிஸ்னியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்.. காரணம் என்ன..?

டிஸ்னி, அதன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வணிக மறுசீரமைப்புக்கு மத்தியில், அதன் ஏபிசி நியூஸ் மற்றும் உள்ளூர் ஊடக நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக மீண்டும் அறிவித்தது.

Walt Disney Logo (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 03, பர்பாங்க் (Technology News): உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி (Walt Disney), செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கங்கள் (Layoffs) 75 செயல்பாட்டு நிலைய ஊழியர்களையும், ஏபிசி நியூஸில் (ABC News) பணிபுரிபவர்களையும் பாதிக்கும். ஏற்கனவே, சுமார் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. டிஸ்னி, அதன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், அதன் ஏபிசி நியூஸ் மற்றும் உள்ளூர் ஊடக வணிகத்திலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக மீண்டும் அறிவித்தது. சமீபத்திய டிஸ்னி பணிநீக்கங்கள் சுமார் 75 ஊழியர்களைப் பாதிக்கும். White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!

டிஸ்னியின் ஏபிசி நியூஸ் நியூயார்க், பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் 8 நிலையங்களை கொண்டுள்ளது. தற்போது, பணிநீக்கம் காரணமாக இந்த நிலையங்கள் அனைத்தும் பாதிக்கக்கூடும். இது "குட் மார்னிங் அமெரிக்கா" மற்றும் "வேர்ல்ட் நியூஸ் டுநைட்" போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது ஆகும்.