Apple Layoff: முக்கிய திட்டங்கள் நிறுத்தம்; 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஆப்பிள்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

Apple Logo (Photo Credit: @APPLE X)

ஏப்ரல் 05, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், தனது தனித்துவமான மற்றும் பாதுகாப்பான ஸ்மார்ட் பொருட்கள் பயன்பாடு காரணமாக உலகளவில் அங்கீகாரம் பெற்று இருக்கிறது. அந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் மக்களால் விலை அதிகம் எனினும் பரவலாக வாங்கி பயன்படுத்தப்படுகிறது.

600 ஊழியர்கள் பணிநீக்கம்: சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்காலம் கருதி மின்சார பயன்பாடு கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே பொருட்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது பணியாளர்களில் 600 பேரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. கார் தயாரிப்பு, ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே உட்பட பல்வேறு பணிகளை திடீரென நிறுத்திய ஆப்பிள், பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. Bird Flu Kills 1000 Penguins: கொத்துக்கொத்தாக ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலி.. உலகை அச்சுறுத்தும் எச்5என்1 பறவைக்காய்ச்சல்.! 

செயற்கை நுண்ணறிவு திறன் வருகை: கடந்த ஆண்டு முதலாகவே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல பணியாளர்களை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிளும் தனது எதிர்கால திட்டங்களில் சிலவற்றை நிறுத்தி, பணியாளர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது நடந்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.