Bharat BioTech Resumes Tuberculosis Vaccine Trial for Adults: காசநோயா? இனி கவலை வேண்டாம்.. தடுப்பூசியை செலுத்தி சோதனையை தொடங்கிய பாரத் பயோடெக்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
முதற்கட்ட சோதனையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, தற்போது இளைஞர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் சோதனையின் பேரில் காசநோய் தடுப்பூசியை செலுத்தி இருக்கிறது.
மார்ச் 24, ஹைதராபாத் (Hyderabad): உலகளவில் மிகப்பெரிய சுவாச நோயாக அடையாளப்படுத்தப்படுவது காசநோய் (Kasanoi or Tuberculosis). காசநோய் காரணமாக சர்வதேச அளவில் ஆண்டுக்கு 1.6 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். மொத்தமாக ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் இந்நோய் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 90% மக்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, 6 மாதங்களில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நோயின் தாக்கம் இருக்கும். காசநோய்க்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் உலகளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 22 Aged Girl Raped by Uncle: காதல் மனைவியின் தங்கை பலாத்காரம்; அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மாமா.. சேலத்தில் பதறவைக்கும் சம்பவம்.!
விரைவில் தேசிய அளவில் காசநோய் தடுப்பூசி அறிமுகம்: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் - ஸ்பெயினின் பயோபாப்பிரி (Biofabri) நிறுவனமும் இணைந்து ஈடுபட்டு இருக்கிறது. இதற்கான ஆய்வுகள் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு மையத்தில் நடைபெற்று வந்தது. எம்டிபிவிஏசி (MTBVAC) என்று பெயரிடப்பட்டுள்ள காசநோய்க்கான தடுப்பூசியின் (Tuberculosis Vaccine) மருத்துவ பரிசோதனையில் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதனின் மீது தடுப்பூசிகள் சோதனை கட்டமாக செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் 2025ல் இந்திய அளவில் காசநோய்க்கான தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்யப்படும். Padikkal Helmet Hits by Boult Fire Ball: படிக்கலின் ஹெல்மட்டை பதம்பார்த்த போல்ட்டின் பந்து: ரசிகர்களை குலைநடுங்கவைத்த சம்பவம்.! போராடி வெற்றிகண்ட ராஜஸ்தான்..!
இந்தியாவில் தொடங்கியது தடுப்பூசி சோதனை: பிறந்த குழந்தைகளுக்காகவும், இளம் பருவத்தினருக்கு ஏற்படும் காசநோயை தடுப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக்கின் காசநோய் தடுப்பூசி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் நம்பப்படுகிறது. இது நீண்ட காலம் உதவும் வகையில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் 28% பேருக்கு காசநோய் ஏற்படுகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் இந்தியாவில் இளம் பருவத்தினர் இடையே நடைபெறும் சோதனை வெற்றியடையும் பட்சத்தில், காசநோயை எதிர்த்து போராடும் இந்தியா உலகுக்கு புதிய வழியை கட்டமைத்து தரும். முதற்கட்ட சோதனையாக தென்னாப்பிரிக்காவில் பிறந்த 7000 குழந்தைகள், மடகாஸ்கரில் பிறந்த 60 குழந்தைகள் மீது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு அவை வெற்றிகரமான முடிவுகளை தந்து இருக்கின்றன. இதன்பேரில் தற்போது இந்தியாவிலும் சோதனை முயற்சியில் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.